15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவருக்கு சிறை!
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாக்கிய 56 வயது உடைய இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு பொலன்னறுவை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
இவ்வாறான பாரிய குற்றங்களை செய்பவர்கள் சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த திறந்த நீதிமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
தன்னை விட 41 வயது இளைய 15 வயது சிறுமியை மூன்று சந்தர்ப்பங்களில் கடுமையாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி குழந்தை பிரசவித்த சம்பவம் தொடர்பாக மூன்று தனித்தனி குற்றச்சாட்டுகளைப் பெற்ற 62 வயது குற்றவாளி அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என கண்டறியப்பட்டது
இந்த குற்றத்தை செய்யும் போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 56 வயதும் சிறுமிக்கு 15 வயதாகவும் இருந்தது
இதனால் சிறுமிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே வயது வித்தியாசம் 41 ஆக இருந்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி மேலும் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதிவாதி, பொறுப்பற்ற முறையில் செயற்பட்டு சிறுமியின் வாழ்க்கையை இருளடையச் செய்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பிரதிவாதிக்கு முப்பத்தாறு (36) வருட கடூழிய சிறைத்தண்டனையை உயர் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த விதித்தார்.
இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், மூன்று உயர் குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 15000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் 12 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமெனவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனை விதிக்கப்படும் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு 62 வயது இருந்ததைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதி விதித்த முப்பத்திரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி, அவர் பெற்ற குழந்தையின் தந்தையை உறுதிப்படுத்த நீதிமன்ற உத்தரவின் பேரில் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்ட போது சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை குறித்த முதியவரே என சோதனையில் உறுதி செய்யப்பட்டது.