65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய இந்திய அரசு ஒப்பந்தம்!
வரும் டிசெம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோ னாத் தடுப்பூசிகளைக் கொள் முதல் செய்ய இந்திய மத்திய அரசு ஒப்பந்தத்தை இறுதி செய்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டி டியூட் மற்றும் கொவோக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டி டியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங் களை இந்திய அரசு இறுதி செய் துள்ளது.
இதன் மூலமாக கொவிட் தடுப்பூசி ஒன்று ரூபா.205இற்கும், கொவோக்சின் தடுப்பூசி ரூபா.215 இற் கும் கொள்முதல் செய்யப்படவுள் ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கொவிUல்ட் தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக்கிடம் 28.5 கோடி கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
த ற்போது பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இந்த ஒப்பந்தம் மூல மாக கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளை விரைவாக மாநிலங் களுக்கு வழங்கவும், வரும் டிசெம்பருக்குள் நாட்டில் 18 வயதுக்கு மேற் பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணியை நிறைவு செய்யவும் இந்திய அரசு திட்டமிட்டி ருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.