779 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறை தண்டனை அனுபவித்துவரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறப்பு பொது மன்னிப்பிற்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
குறித்த கைதிகள் இன்று விடுவிக்கப்பட உள்ளனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
கைதிகளின் உறவினர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவு, இனிப்பு பண்டங்களை வழங்க முடியுமென சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.