தாய், தந்தை, மகள் மூவரும் அடுத்தடுத்து பலி! கொரோனா தொற்று உறுதி!

தந்தை மரணித்ததை அடுத்து தொடர்ச்சியாக தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் புதைக்கப்பட்ட தந்தையின் ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தின் வேப்பமடு பகுதியிலுள்ள மயானத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டிந்தது.

நான்கு பிள்ளைகளது தந்தையான முஹம்மட் நிஸ்தார் (வயது 56) என்பவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த அன்றைய தினமே வேப்பமடு பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து இரு நாட்களின் பின் 6ம் திகதி காலை அவரின் மனைவி சித்தி அஜீபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) குறித்த தினத்தின் நண்பகல் வேளையில் அடுத்தடுத்து உயிரிழந்திருந்தனர்.

ஒரேநாளில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரது ஜனாஸாக்களுக்கும் செய்யப்பட்ட, பி.சி.ஆர். பரிசோதனையின் போது இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், 4ஆம் திகதி உயிரிழந்த தந்தையான முஹம்மட் நிஸ்தாருக்கு (வயது 56) தொற்று இருக்கலாம் என சுகாதார பிரிவினர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.