ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 சந்தேக நபர்கள் கைது!!!

இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பறி முதல் செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொகையின் எடை 150 கிலோ கிராம் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதிக அளவு போதைப் பொருட்களை கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி படகு ஒன்று 9 சந்தேக நபர்களுடன் இன்று சுற்றி வளைக்கப்பட்டது.

பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு மீன்பிடி படகு மற்றும் 9 சந்தேக நபர்களும் தற்போது இலங்கை கடற்படை கப்பலான சிதுரலாவின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.