நுரைச்சோலை கடலில் கரையொதுங்கிய பாரிய இயந்திரம்!
கற்பிட்டி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் கடலில் நடுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றியிறக்கும் பாரிய இயந்திரம் நுரைச்சோலை இளந்தையடி பகுதியில் நேற்று (26) கரையொதுங்கியுள்ளது.
புத்தளத்தில் நேற்று கடும் காற்று வீசியது. இந்த நிலையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் கடலில் நடுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றியிறக்கும் சுமார் 120 அடி நீளம் கொண்ட பாரிய இயந்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கரையொதுங்கிய நிலக்கரி ஏற்றியிறக்கும் பாரிய இயந்திரத்தை மீண்டும் நடுக்கடலுக்கு கொண்டு செல்லுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.