இராணுவத் தளபதி மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

“இலங்கையில் கோவிட் வைரஸ் பரவல் முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவில்லை. பொருளாதார பிரச்சினைகளால் நாட்டைத் தொடர்ந்து மூடி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினோம். வைத்திய நிபுணர்களின் கூற்றின்படி மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பாட்டால் மீண்டும் நாடு பேராபத்தை எதிர்கொள்ளும்” என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் மக்களின் செயற்பாடுகளே அக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும்.

ஒரு மாதத்திற்கும் அதிக காலம் நாட்டை முடக்கி கோவிட் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.

மக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும். நாட்டைத் தொடர்ந்து முடக்கி வைக்க முடியாது.

கடந்த காலங்கள் முழுவதுமாக மக்கள் வழங்கிய ஆதரவுக்கமைய தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது.

இந்தக் காலப்பகுதிகளிலும் அதே போன்று அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்கொண்டு நடத்திச் செல்ல முடியும்.

அதற்கமைய அரச ஊழியர்களின் பணிகள் வழமையான முறையில் நடத்திச் செல்லப்படவுள்ளது.

அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.