எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு இதுவே காரணம்!
எரிபொருள் நிறுவனங்களின் விலை சூத்திரம் அமுலில் இருந்திருந்தால் ஒரே நேரத்தில் பாரிய அளவில் விலை அதிகரிப்பு ஏற்பட்டிருக்காது என லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.
தமது நிறுவனத்தின் செலவை ஈடுசெய்யும் அளவில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதாகவும் அடுத்த மாதத்தில் உலக சந்தையில் எரிவாயு விலை 50 – 60 டொலர் அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோரை பாதிக்கும் பொறுப்பு அரசை விட தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.