முடக்கமே தீர்வாக அமைய வாய்ப்பு!
கொரோனா தொற்றாளர் களின் எண்ணிக்கை தொடர்ந் தும் அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்குமாறு பரிந் துரை செய்வதைத் தவிர சுகா தாரத் துறைக்கு வேறு வழி யில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாய கம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள் ளார்.
சுகாதார அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் பொதுமக்களின் போராட் டங்களால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சுகாதார வழி காட்டுதல்கள் சரியான முறை யில் பின்பற்றப்படவில்லை எனவும், கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் ஒரே நாளில் அதிகளவானோருக்கு கொரோனோ தொற்று பரவக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.