வரவு செலவு திட்டத்தை அடுத்து வாகன விலையில் திடீர் மாற்றம்!
அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவு திட்டம் நேற்று முந்தினம் வெளியிடப்பட்ட நிலையில் இதில் வாகனங்கள் குறித்து எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதால் மீளவும் வாகனங்களின் விலை அதிகரிக்குமென தாம் எதிர்பார்ப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன வரி அல்லது இறக்குமதி குறீத்து இந்த முறை வரவு – செலவுத் திட் டம் மூலம் எவ்விதமான தளர்வுகளும் இல்லாமையினால் இந்நிலைமை ஏற்படும் என சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் இந்திக்க சம்பத், வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
சந்தையில் உள் ள வாகனங்களும் விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படும் நிலை காணப்படுகிறது.
அந்நிய செலாவணி அதிகரிக்கும் வரையும் வாகனங்கள் குறித்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாது என்றே தோன்றுகின்றது.
இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிவதாக குறிப்பிட்டுள்ளார்.