அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி!
அனைத்து அரச ஊழியர்களையும் நாளைய தினத்தில் இருந்து வழமைபோல சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இதுகுறித்து விசேட சுற்று நிருபத்தினை அரசு சேவை மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குறித்த நிறுவனத்தின் நிர்வாகியின் தீர்மானத்திற்கு அமைவாகவே இதுவரை அரச சேவையாளர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
நாளைய தினத்தில் இருந்து வழமையான முறையில் பணிகள் நடைபெறுவதால் அனைத்து திணைக்களங்களிலும் சுகாதார வழிமுறைகளை சரியான விதத்தில் கடைப்பிடிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டின் வழமையான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அரசசேவையும் புத்தாண்டில் இருந்து வழமைப்போல நடைபெற வேண்டும்.
கொரோனா பரவல் காரணமாக அரசசேவை ஊழியர்களுக்கு இரு வருட காலம் சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது.
தேவையின் அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அழைக்கும் அதிகாரம் இதுவரையும் நிறுவக பிரதானிக்கு வழங்கப்பட்டது. இந்த அதிகாரம் புத்தாண்டு தொடக்கம் இரத்து செய்யப்படுவதாக அரசசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.