க.பொ.த உயர்தர மீளாய்வில் C சித்தி A சித்தியாக மாற்றம்!
கபொத உயர்தர பரீட்சை முடிவுகளின் மீளாய்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்னர் வெளியகி இருந்தன.
இதன்போது கண்டி தர்மராஜ கல்லூரியில் கல்வி கற்ற ருசிரதிசங்க அபேவர்தன எனும் மாணவனின் கணித பாட பெறுபேறு C சித்தி என முன்னர் வெளிவந்த நிலையில் மீளாய்வு பெறுபேறு A சித்தியாக மாற்றம் பெற்றுள்ளது.
உயர்தர கணிதபாட பிரிவில் குறித்த மாணவன் கல்வி கற்று இருந்தார்.
குறித்த மாணவன் இரசாயனவியல், பௌதீகவியல் ஆகிய பாடங்களில் A சித்திகளை பெற்றிருந்தார். கணித பாடத்தில் இவருக்கு C சித்தியே கிடைத்திருந்தது.
இந்த பரீட்சை முடிவுகளின்படி Z புள்ளி 2.0084 ஆகவும், மாவட்ட நிலை 68 ஆகவும், தேசிய நிலை 966ம் இடமாகவும் காணப்பட்டது.
இந்நிலையில் மீளாய்விற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் கணித பாட பெறுபேறு C யில் இருந்து Aயாக மாற்றம் பெற்றது.
இதன்படி, மாணவரின் Zபுள்ளி 2.5538 ஆகவும், மாவட்டநிலை 12 ஆகவும், தேசியநிலை 124 ஆகவும் மாற்றம் பெற்றது.
இந்த பரீட்சை முடிவுகள் மாற்றம் பெற்றமையானது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மீளாய்விற்காக 48ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இதில் 329 மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம் அடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D தர்மசேகன தெரிவித்தார்.