தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு!

கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துக் கொண்டு வந்தமையினால் ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்தது.

எனினும் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று கொண்டிருக்கிறது.

இப்பொழுது ஒமைக்ரான் கொரோனா திரிபு, உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது.

இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் கொரோனா நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசிற்கு மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இப்பொழுது, தமிழகம் உட்பட ஏனைய மாநிலங்களிலும் ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது.

இதன் பரவலை கட்டுப்படுத்தவென டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.

எனினும், தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு இதுவரை அமுல் செய்யப்படவில்லை.

தமிழகத்தில், கடந்தஒரு வாரத்திற்கு முன்னர், தினமும் 600ஆக இருந்த கொரோனா பாதிப்பு, இப்பொழுது 1,800ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மீளவும் முழுஊரடங்கு அமலுக்குவர வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.