மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு! அதிகம் பகிருங்கள்!
சுகாதார அமைச்சின் மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மாணவ தாதியர் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கு சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்(Online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை 2022.01.31ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் தொடர்பான மேலதிக தகவல் பற்றி அறிந்து கொள்ள சுகாதார அமைச்சின் இணையத்தளமான www.health.gov.lkஐ அணுக முடியும்.