புதிய வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!
அந்நிய செலாவணி கிடைக்க பெற்று, நாட்டின் பொருளாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின் வாகனங்களை இறக்குமதி செய்ய மீளவும் அனுமதி வழங்குவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித்நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் வாகன இறக்குமதியை இடைநிறுத்துவது குறித்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வாகனங்கள், ஓடுகள் தவிர அத்தியாவசியம் அற்ற அனைத்து பொருட்களும் இப்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணி நாட்டைவிட்டு வெளியேறுவதாகவும் மத்தியவங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
எனினும், எதிர்வரும் மாதங்களில் நாட்டிற்கு பெருமளவிலான அந்நிய செலாவணியை பெற்று தரக்கூடிய சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதன் ஊடாக வாகனங்களை மீளவும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியுமென நம்புவதாக நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டார்.