இலங்கையர்கள் வீசா இல்லாமல் எத்தனை நாட்டுக்கு போகலாம்னு தெரியுமா?
உலகின் மிகசக்திவாய்ந்த கடவு சீட்டு பட்டியலில் 102வது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
2022ம் ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த கடவுசீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டிருந்தது. 111 நாடுகல் உள்ளடக்கப்பட்ட இந்த பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.
இப்பட்டியலில் இலங்கை, லெபனான், சூடான் ஆகிய நாடுகளும் 102வது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கமைய இலங்கைகடவுசீட்டு வைத்திருப்பவர்கள் 41நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேசவிமான போக்குவரத்து சங்கம் வழங்கும் தரவுகளை அடிப்படையாக வைத்து 2006ம் ஆண்டு தொடக்கம் உலகின் சக்தி வாய்ந்த கடவுசீட்டு பட்டியலை ஹென்லிவெளியிட்டு வருகிறது.
இதற்கமைய இப்பட்டியலில் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடவுசீட்டுகள் 1வது இடத்தை பிடித்துள்ளது. குறித்த நாடுகளது கடவுசீட்டுகளை வைத்து 190 நாடுகளிற்கு பயணிக்க முடியுமென்பதும் குறிப்பிடத்தக்கது.