ஐஸ்வரியாவை விவாகரத்து செய்யும் நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வரியாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பில் அறிக்கையை வெளியிட்ட தனுஷ், 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதியாக பெற்றோராக வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தம்இருவரின் வாழ்க்கைபயணம் வளர்ச்சி, புரிந்துகொள்ளுதல், விட்டுகொடுத்தல் என இருந்தது எனவும்,
தற்போது இருவரும் தனிதனியான பாதையில் பயணிக்க முடிவுசெய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருதம்பதியாக ஐஸ்வரியாவும் தாமும் பிரிந்துசெல்ல முடிவெடுத்துள்ளதாகவும், தனிப்பட்டமுறையில் தம்மை புரிந்துகொள்ள நேரமெடுத்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.