பிரபாகரனின் புகைப்படத்தை பதிவிட்டவருக்கு 13மாதத்தின் பின் பிணை!

புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட 30வயதுடைய இளைஞருக்கு 13 மாதத்தின் பின்னர் நேற்று(27)  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புளியங்கண்டலடி – வாகரையைச் சேர்ந்த 30வயதுடைய விஜயதாஸ எனும் குடும்பஸ்தரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முகப்புத்தகத்தில் அரசினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் புகைப்படத்தினை பதிவிட்டதற்காக 27.11.2020 அன்று வாகரை பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒரு பிள்ளையின் தந்தையான இவர் கடந்த 13 மாதங்களாக தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்தார்.

சட்டமா அதிபரது ஆலோசனைக்கு அமைவாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு சென்று காலை 9 மணிமுதல் 12 மணிக்குள் கையொப்பமிட வேண்டும் எனும் நிபந்தனையும் நீதிமன்றால் விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.