உயர்தரப் பரீட்சை 5 மாதங்களுக்கு பிற்போடப்படுமா?
2021ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இடம்றவுள்ள நிலையில், அது தொடர்பில் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை பிற்போடுமாறு கோரியே குறித்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில் 20 வாரங்களுக்கு உயர்தர பரீட்சையினை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்கு முன் இருமுறை தொற்று காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.