பெற்ரோல் டீசல் லீற்றருக்கு 125 ரூபாவால் குறைக்க முடியும்!
பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை லீற்றர் ஒன்றுக்கு 125 ரூபாவால் குறைக்க முடியுமென எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டுத் தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலையையும் 125 ரூபாவாக குறைக்க முடியும்.
விலைச்சூத்திரத்தின் பிரகாரம் விலை குறைக்கப்பட வேண்டும் எனவும் ஆனால் மக்களுக்கு அந்த நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி மற்றும் லாபங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த விலைக் குறைப்பை மேற்கொள்ள முடிந்தபோதிலும் இலங்கைப் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் விலைக் குறைப்பை செய்யத் தவறியுள்ளது என்றார்.