வெளிநாட்டவருக்கு 10 ஆண்டு விசா – இலங்கையில் புதிய விசா திட்டம்
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை விசாவினை வழங்கும் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கே நீண்ட கால வீசா வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை வாங்குபவர்கள் இன்று முதல் இரண்டு லட்சம் டொலர் முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் வரை விசாவினை பெற முடியுமென இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.