கூட்டு பொறிமுறை மூலம் இறால் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
இறால் வளர்ப்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதோடு, ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இறால் பண்ணையாளர்கள் மற்றும் இறால் குஞ்சுகள் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(24.11.2022) நடைபெற்றது.
ஏற்றுமதியாளர்கள், கருத்தரிப்பு நிலைய உரிமையாளர்கள், இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் ஆகிய முத்தரப்பும் ஒன்றிணைந்த கூட்டுப் பொறிமுறை ஊடாக இத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.