புலிகளின் தலைவரின் வீட்டை சூழவுள்ள பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 26ஆம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம். அதேவேளை 27ஆம் மாவீரர் தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இச்சூழலிலேயே இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.