வெடுக்குநாறி மலை தொடர்பில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட விடயம்
வெடுக்குநாறி மலையிள் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் குறித்து அப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கையினை கூட்டமையிப் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் முன்வைத்துள்ளார்.
வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் தொடர்ச்சியாக வழிபாடுகளை செய்து வந்தனர். எனினும் மலையை சேதப்படுத்தியதாக தெரிவித்து தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றில் வழக்கு தொடுத்தது.
நீதிமன்றத்தால் மலை சேதப்படுத்தப்படவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை மக்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கேட்பது அந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கான அனுமதியை எடுத்து தருமாறு கேட்பதாக கூறியுள்ளார்.