புலிகள் இயக்க தலைவர் ஒருவரின் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது
புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்திய மைக்ரோ ரக கைத்துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்கள், இரு மெகசீன்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ தளபதி ஒருவர் குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு மருத்துவ பரிந்துரைக்கு அமைவாக இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற கம்பஹா அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் வசித்துவரும் 42 வயதுடைய முன்னாள் இராணுவ அதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு குளியல் அறையில் தண்ணீர் வழிந்தோடும் குழாய்குகள் சூட்சுமான முறையில் இந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கைத்துப்பாக்கியை வைத்திருப்பதாகவும் அதனை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் செய்வதாகவும் கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கைத்துப்பாக்கியும் தோட்டக்களும் கைப்பற்றப்படடுள்ளன.
இராணுவத்தில் கடமையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கியை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளார். அத் துப்பாக்கியில் சில தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கியினை பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயல்களில் சந்தேகநபர் ஈடுபட்டாரா என்பதை கண்டறிவதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பொலிஸார் நேற்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.