முட்டையின் விலை 80 ரூபா
பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாமென அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் நிலையில் இவ்விலை உயரும் என்றும் கூறினார்.
கால்நடை தீவனத்தின் விலை உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.