பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 14வயது சிறுவன்

2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அண்மையில் வெளியானது. இதன்படி 14 வயது மாணவர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.

14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவனே இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவனான இவர், 8ஆம்  தரம் கல்வி கற்கும் போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எழுதி, 6 மாதங்களுக்கு பின், 9 தரத்தில் க பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

இதற்கமைய உயர்தர பிரிவில் இவர் மூன்று B சித்திகளை பெற்றுள்ளார். இதன்படி அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.

முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேவம் குருகுல வித்தியாலயத்தில் படித்த அவர், அதன் பின்னர் நானமல் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த மாணவன் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் மூத்தவர் எனவும் அவரின் பெற்றோர் ஆசிரியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.