யாழில் குழந்தை பிரசவித்த 14 வயது சிறுமி, காரணமான 73 வயது முதியவர் கைது!
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றைய தினம் யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.