மின் கட்டணத்தை அதிகரித்தாலும் மின்வெட்டை தடுக்க முடியாது
மின் கட்டணத்தை அதிகரித்தாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2023ல் மழை வீழ்ச்சி குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலக்கரி மற்றும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு போதியளவு டொலர் இல்லாத காரணத்தினால் 2023 தொடக்கத்தில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
மின்வெட்டை தடுக்க கட்டணம் உயர்த்தப்படும் என அமைச்சர் கூறிய போதிலும், மின்சாரக் கட்டணம் அதிகரித்தாலும் மின்வெட்டை தவிர்க்க முடியாது என மின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.