பணவீக்கம் குறைந்து வருகின்றது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாட்டில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும் அதுமேலும் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் குறித்த மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரிசி, கோதுமை, பருப்பு சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயராமல் இருக்க தொடர்ந்து அரசாங்க அமைச்சர்களின் குழுவை அமைத்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
வாரந்தோறும் அடிப்படை பொருட்களின் விலை ஏற்ற நிலைமைகள் ஆராயப்படுவதாக தெரிவித்த நிதியமைச்சர், மத்திய அரசாங்கத்தை பணவீக்கம் தொடர்பாக தாக்கி வரும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த பணவீக்கத்தையும்; ஒப்பிட்டு பேசினார்.