பூம்புகார் கிராமத்தில் திடீரென உயிரிழந்த கால்நடைகள்
8 கால்நடைகள் வவுனியா பூம்புகார் கிராமத்தில் திடீரென இறந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று(18) மாலை உழுந்து செய்கை ஒன்றில் மேய்ச்சலுக்காக சென்ற கால்நடைகளே இவ்வாறு இறந்துள்ளன.
உழுந்து செய்கைக்கு யூரியா கலவை தௌிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை உண்டதனால் இவை இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், கால்நடைகள் இறப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்கு கால்நடை வைத்தியர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர்.