பாடசாலை சீருடைகளை நன்கொடையாக வழங்கியது சீனா
5 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைப் பொருட்களை இலங்கைக்கு சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் முழு நாட்டின் 70% தேவையை பூர்த்தி செய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது தொகுதி முடித்த பொருட்கள் ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.