மயிலிட்டி கடலில் மீனவர் மாயம்: கவிழ்ந்த நிலையில் படகு மீட்பு!
பலாலி அன்ரனிபுரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று அதிகாலை மயிலிட்டி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணமல் போனவர் ரொபர்ட் கெனடி (54) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
அவரது படகு கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும், பலனளிக்கவில்லை.