நெய்யில் கலப்படம் – பரிசோதனை செய்ய அமைச்சு தீர்மானம்
மரக்கறி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நெய்யில் கலப்படம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மலையகப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறான விற்பனைகள் இடம்பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், துறைமுகத்தில் இருந்து விநியோகிக்கப்படும் நெய்யை பரிசோதனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.