தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருந்துகள் நன்கொடை
10 மில்லியன் ரூபா பெறுமதியான, உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய், வைத்தியசாலைக்கு கனேடிய தமிழர்கள் நன்கொடையாக வழங்கினர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால், நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.
இச் சூழலைக் கருத்தில் கொண்டு இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 6, மருத்துவமனைகளுக்கு மருத்துவ பொருட்களை வழங்குவது எனத்திட்டமிடப்பட்டது.
இந்த நன்கொடையின் முதற்கட்டமாக மருந்துப் பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கனேடியர் தமிழர் பேரவையின் மனிதநேயப் பணியாளர் சிவம் வேலுப்பிள்ளை, செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமரன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்கள், பணியாளர்கள், நலன்புரிச் சங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.