உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு
உள்ளூராட்சி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நாளை மறுதினம் (23) காலை 10.00 மணிக்கு கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்காக அனைத்து மாவட்ட பிரதி, உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்குமான அழைப்பு அழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ளார்.
இதன்போது தேர்தலை நடத்துவது தொடர்பான சகல விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.