காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் இதுவரை 77 பேர் பதிவு

தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பாக 77 பேர் இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் யாழ்மாவட்ட கிளையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

இந்நிலையில் யாழ் கல்வியங்காட்டில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இன்று பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த பதிவு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்ற நிலையில், அதேநேரம் ஒரு சிலர் அதிகாரிகளிடம் பதிவுகளை மேற்கொண்டனர்.

அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு பயண கொடுப்பனவாக ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.