எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்
எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனவே எழிலனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டியது இராணுவத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே நீதிமன்றில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இராணுவம் அந்த கடமையில் இருந்து விலக முடியாது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.