சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை
இந்நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இந்த தேசம் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீளக் கொண்டுவர கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர்.
ஆனால் யாரோ செய்த தவறினால் அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. அதற்கு யார் பொறுப்பு என்று தெரியவில்லை.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி மட்டும் திரு ரணில் விக்கிரமசிங்க நாட்டை அதல பாதாளத்தில் இருந்து மீட்டெடுக்க முன்வந்தார்.
அந்த சவாலை ஏற்று படிப்படியாக நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு இன்னும் சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
நாடு தற்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.