குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினர் கோட்டாபய ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் மனோச் ராஜபக்ஷ, மருமகள் மற்றும் அவரது பேரக்குழந்தையுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை 2.55 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன் விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரியவருகிறது.