உறுதியான தகவல்கள் இன்றி பாடசாலை மாணவர்களை பரிசோதிக்க வேண்டாம்: பொலிஸ்மா அதிபர் பணிப்புரை
(LBC Tamil) போதைப்பொருள் தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களை பரிசோதிக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்ன அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, உறுதியான தகவல்கள் இன்றி பாடசாலை மாணவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக அவர்களை வீதிகளில் நிறுத்தி சோதனைகள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அதனை ஔிப்பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் எனவும் பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார்.