எதிர்க்கட்சி தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
(LBC Tamil) நாட்டின் ஆட்சியில் காணப்படும் பிறழ்வான தன்மையை சீர்செய்வதற்கான பிரதான வேலைத்திட்டங்கள் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தான் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தோல்வியுற்ற நிர்வாகத்தின் அடக்குமுறையை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது எனவும் நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய வேலைத்திட்டம் குறித்து புதிதாக சிந்திக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.