142 புதிய பொருட்களுக்கான HS குறியீடுகள்
142 புதிய வகை பொருட்களுக்கான சுங்கக் குறியீடுகளை (HS Codes) நிதியமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (02) அறிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் HS குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறக்குமதி-ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் நெறிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டர் செய்தியின் ஊடாக மேலும் தெரிவித்துள்ளார்.