தேசிய இளைஞர் தளத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

(LBC Tamil) 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் பலம் மிக்க இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் பங்காளர்களாவதற்கு  இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், 25 வருட கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர் சமூகத்தை பொறுப்பான பங்காளர்களாக ஈடுபடுத்துவதற்காகவும் தேசிய இளைஞர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, எதிர்கால அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் பற்றி குறை கூறாது அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சமூகம் முன்னின்று செயற்பட வேண்டும் என்பதும், அதற்கான சிறந்த வாய்ப்பாக தேசிய இளைஞர் தளம் அமையும் என்பதும் ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

உறுப்பினர், இளைஞர் அமைப்பு மற்றும் ஆலோசகர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தேசிய இளைஞர் தளத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உறுப்பினராக விண்ணப்பிப்பதற்கான வயது எல்லை 16 முதல் 35 ஆகும்.

இளைஞர் அமைப்பிற்கு   40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், ஆலோசகர் பதவிக்கு வயதெல்லை கிடையாது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தாம் பணிபுரிய விரும்பும்  துறையை தெரிவு செய்து,  இம்மாத இறுதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.