ஜனாதிபதியுடனான சந்திப்பில் முன்னேற்றம் இல்லை – கூட்டமைப்பு முழு அதிருப்தி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பு அவ்வளவு திருப்தி தருவதாக இல்லை. கடந்த டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் முன்னேற்றம் எதுவும் இன்று வரை இல்லை.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அதே கருத்தை மற்றொரு கூட்டமைப்புப் பிரமுகரான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் பிரதிபலித்தார்.
அரசுப் பிரமுகர்களுக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அரசு தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்குபற்றினர்.
வெளி விவகார அமைச்சர் அலி சப்றி வெளிநாடு சென்றிருப்பதால் அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
தமிழர் தரப்பில் கூட்டமைப்புப் பிரமுகர் களான சம்பந்தன், செல்வம் அடைக் கலநாதன், சித்தார்த்தன். சுமந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
நேற்றைய சந்திப்பு தொடர்பில் சுமந் திரன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாக கடந்த சந் திப்பில் தெரிவித்த அதே கருத்துக்க ளையே இன்றைய சந்திப்பிலும் திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
எந்த முன்னேற்றமும் இல்லை. ஆக்கிமிக்கப்பட்ட காணி விடுவிப்புத் தொடர்பாக வரும் தைப்பொங்கல் தினத்தன்று – 15ஆம் திகதி – தாம் யாழ்ப்பாணத் திற்கு வந்து, படைத்தரப்பினருடனும் பேசிவிட்டு, அது பற்றிய முடிவை அங்கு வைத்து அறிவிப்பார் என ஜனாதிபதி கூறினார்.
எனினும் அந்த விடயம் தொடர் பில் எங்களுக்கு நம்பிக்கை பிறக்க வில்லை. பத்தாம் திகதி அடுத்த சுற்றுப் பேச்சு ஆரம்பமாக முன்னர் நல்லெண்ண சமிக்ஞை எதுவும் அரசுத் தரப்பிடம் இருந்து வரப்போவதில்லை என்பது தெளிவாக இருப்பதால் நாங்கள் அதிருப்தி அடைந்து இருக்கிறோம்.
எனினும் தீர்வுக்கான பேச்சு முயற்சியை தமிழர்கள் முறித்துக் கொண்டார்கள் என்ற அபவாத குற்றச்சாட்டு வராமல் பார்ப்பது எங்கள் பொறுப்பு என்பதால் பொறுப்புணர் வுடன் பொறுமை காக்கின்றோம்.
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற வுள்ள சர்வகட்சி சந்திப்பின் போது உட னடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்கள் பற்றி ஒரு பட்டியல் தருமாறு சொன்னார்கள்.
நான் அதைத் தருகின்றேன் என்று தெரிவித்தேன். அதேநேரத்தில் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இன்னமும் ஒரு முன்னேற்றம் இல்லை எனில் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கவேண்டி வரும் என்பதை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம். – என்றார்.