மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதிய விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் பலி
(LBC Tamil) வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு(09) மோட்டார் சைக்கிளில் சென்ற சார்ஜன்ட் ஒருவர் மின் கம்பமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாண்டிக்குளம் சந்தியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் மோட்டார் சைக்கிளுடன் சடலமொன்று காணப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.