13வது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி உறுதி
13வது திருத்த சட்டமானது முழுமையாக அமுல்ப்படுத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று இடம்பெறும் தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.
13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது வடக்கிற்கு மாத்திரம் சம்மந்தமான பிரச்சினை இல்லையெனவும், தென்பகுதியில் உள்ள முதலமைச்சர்கள் கூட 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.