யாழில் கட்டுப்பணம் செலுத்தியது இலங்கை தமிழரசு கட்சி

(LBC Tamil) யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசு கட்சி இன்று திங்கட்கிமமை செலுத்தியது.

யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் உள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழரசு கட்சி போட்டியிடுவதற்கான கட்டு பணத்தை செலுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.