A/L மின்வெட்டால் தமக்கு அச்சுறுத்தல் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர
மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதிகாரிகள், ஏற்றுக்கொள்ளப்படாத இரண்டு ஆவணங்களில் கையொப்பமிடுமாறு தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17 வரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைக்கான எந்தவொரு கோரிக்கையையும் அங்கீகரிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தது.