மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் PUCSL-க்கு தெரிவிக்குமாறு கோரிக்கை
(LBC தமிழ்) இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத மின் தடைகள் தொடர்பில் எழுத்து மூலம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“இலங்கை மின்சார சபையினால் அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகள் ஏதேனும் விதிக்கப்பட்டால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறு பொது மற்றும் மின்சார நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17 வரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளுக்கான எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று PUCSL இன்று முன்னதாக CEBக்கு எழுத்து மூலம் அறிவித்தது.
நேற்றும் இன்றும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.